Idhayam Matrimony

பத்மஸ்ரீ விருது பெற்றதை கவுரவமாக கருதுகிறேன் : பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி நெகிழ்ச்சி

புதன்கிழமை, 26 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : பத்மஸ்ரீ விருது பெற்றதை கவுரவமாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ள பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, 91 வயதில் இந்த விருதை பெறுவதில் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை சவுகார் ஜானகிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இவர் 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். என்.டி.ராமராவ் நடித்த சவுகார் என்ற தெலுங்கு படத்தில் 19-வது வயதில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அவர் 70 வருடங்களாக சினிமாவில் நடித்துள்ளார். 1950-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை அவர் மிகவும் பிரபலமாக விளங்கினார்.

பாலசந்தர் இயக்கிய ஏராளமான படங்களில் நடித்தார். இதில் இரு கோடுகள், பாமா விஜயம், எதிர்நீச்சல் ஆகியவை அடங்கும். எதிர்நீச்சல் படத்தில் அவர் நடித்த பட்டுமாமி கதாபாத்திரம் தேசிய அளவில் புகழ் பெற்றது. புதிய பறவை, தில்லுமுல்லு படங்களில் கிளப் பாடகியாக நடித்துள்ளார். இவர் ஜெமினி கணேசனின் தோழி ஆவார். சவுகார் ஜானகியின் திறமைகளை ஜெமினி கணேசன் வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

விருது பெற்றது குறித்து சவுகார் ஜானகி கூறுகையில், “தான் பெற்ற விருதுகளில் பத்மஸ்ரீ விருது பெற்றதை கவுரவமாக கருதுகிறேன். எனது 91-வது பிறந்த நாளுக்கு பிறகு இந்த விருதை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை சிறந்த அங்கீகாரமாக கருதுகிறேன். விருது வழங்கிய மத்திய அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து