முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக உதவிகளை செய்யும் நடிகர் ஷிரிஷ்

ஞாயிற்றுக்கிழமை, 6 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

மெட்ரோ  பட புகழ் நடிகர் ஷிரிஷ் பல சமூகம் சார்ந்த உதவிகளை செய்து வருகிறார். இதைப் பற்றி பகிர்ந்து கொண்ட ஷிரிஷ், “11 ஆம் வகுப்பு படிக்கும் நான்சி எஸ்தர் மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் அபிஷேக ராஜன் ஆகிய ஏழை மாணவர்களின் திறமையையும் சாதனையையும் பார்த்து பிரமித்து போனேன். அவர்கள் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளனர். அவர்களிடம் திறமைகள் இருந்தபோதிலும், யூத் கேம்ஸ் சர்வதேச சாம்பியன்ஷிப்பில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை என்பது ஏமாற்றமளித்தது. அதனால், உடனடியாக அவர்களின் பயண செலவுகள் அனைத்தும் நான் பார்த்துக்கொள்ள முடிவு செய்தேன். எதிர்காலத்திலும் இன்னும் பல உதவிகளை செய்வேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!