முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகான் – விமர்சனம்

சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

விக்ரம் & துருவ் விக்ரம் இணைந்து நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மகான்”. நேரடியாக ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. தந்தை – மகன் இருவரும் ஒரே படத்தில் தோன்றியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்ப்படுத்தியுள்ளது. காந்தியின் கொள்கைகளை பின்பற்றி நடப்பதற்காக காந்தி மகான் என விக்ரமிற்கு பெயர் வைக்கப்படுகிறது. ஒழுக்கமான பள்ளி ஆசிரியர் விக்ரம். மனைவி சிம்ரன். குழந்தை துருவ் என அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஒருநாள் மனைவி ஊருக்குச் சென்றதும், கூத்தும் கும்மாளமுமாக அந்த நாள் முழுவதும் ஜாலியாக இருந்து விடுகிறார் . மறுநாள் சிம்ரனுக்கு விஷயம் தெரிந்து விட, தனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு கண்காணா இடத்திற்குச் சென்று விடுகிறார். சாராய வியாபாரியான பாபி சிம்ஹாவை சந்தித்து அவருடன் ஐக்கியமாகிறார் விக்ரம். வருடங்கள் கடந்து செல்ல. தமிழகத்தில் சாராய வியாபாரத்தில் தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைக்கின்றனர் விக்ரமும் பாபி சிம்ஹாவும். இந்த சாம்ராஜ்ஜியத்தை சாய்ப்பதற்காக வட மாநிலத்திலிருந்து தனி போலீஸ் படை ஒன்று தமிழகத்திற்கு வருகிறது. இந்த போலீஸ் படைக்கு தலைமையாக என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் துருவ் விக்ரம் வருகிறார். அதன் பிறகு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் போர் தான் இந்த “மகான்” படத்தின் மீதிக் கதை. தந்தை விக்ரமும் மகன் துருவும் போட்டி போட்டு நடித்து அசத்தியுள்ளனர், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், முத்துக்குமார் ஆகியோரின் நடிப்பு அபாரம். ஸ்ரேயாஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம். மொத்தத்தில் மகான் ஒரு மிரட்டல் படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து