முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருளர் வாழ்வியலை கூறும் இருளி

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

முருகனுக்கு இனியவன் P.ஶ்ரீராம் தேவா, செவ்வானம் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்க, இயக்குநர் மதன் கேப்ரியல் இருளி படத்தை இயக்குகிறார். முரளிதரன் கதை எழுதியுள்ளார். P.B.பாலாஜி இசையில் அ.ப.ராசா பாடல் வரிகளுக்கு செந்தில் கணேஷ், ராஜலஷ்மி, முத்துச்சிற்பி, மும்பை  ஹம்சிகா ஐயர், ரோஷினி, விதுயனி பரந்தாமன், சாய் சரன் முதலானோர் பாடுகிறார்கள். வரன் ஒளிப்பதிவு செய்ய இணைப்பதிவை பிரபாகரன், பாபு உதயகுமார், ஹரி சாந்தன் செய்கின்றனர். நிர்வாக தயாரிப்பை சந்துரு செய்கிறார்.இப்படத்தில் செந்தில் கணேஷ்(ராஜலஷ்மி), டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், M.S.பாஸ்கர், மனோபாலா முதலானோருடன் Method Acting  எனப்படும் நடிப்பு பயிற்சி பெற்ற மாணவர்கள் இணைந்து நடிக்கிறார்கள். இதுவரை திரைத்துறை கண்டிராத, இசை மற்றும் நடனத்தில் ஒன்றாக கலந்துள்ள இருளர்கள் வாழ்வியலை இப்படம் காட்டவுள்ளது, அதனுடன் உணர்வுபூர்வமான காதல், கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த படமாக இப்படம் உருவாகவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து