முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகும் ஹே சினாமிகா

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

பிரபல நடன இயக்குனர் பிருந்தா முதன் முதலாக இயக்கும் படம் ஹே சினாமிகா. இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் இந்த வாரம் வெளியாவதை ஒட்டி படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நாயகன் துல்கர், இது ஒரு சிறந்த தொடக்கம், இப்படத்தின் பயணத்தை அன்பான பெண்களான காஜல் அகர்வால், அதிதி ராவ், பிரீத்தா ஜெயராமன் மற்றும் பிருந்தா மாஸ்டருடன் தொடர்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார். முன்னதாக பேசிய படத்தின் இயக்குனர் பிருந்தா மாஸ்டர், காதல், நகைச்சுவை உணர்வுகள் மற்றும் இசையின் கலவையாக இப்படம் உருவாகியுள்ளது என்றார். இளைஞர்கள் மிகவும் ரசிப்பார்கள். அதே சமயம், அனைத்து வயதினரும் இப்படத்தைப் பார்த்து மகிழலாம். கொண்டாட்டம், குதூகலம் என உணர்ச்சிகளின் உற்சாகக் குவியலாக ஒரு ஃபீல் குட் திரைப்படமாக இருக்கும் இந்த ஹே சினாமிகா படம் என்றார். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் இப்படம் மார்ச் 3 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து