முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.38 ஆயிரத்தை தாண்டியது: தங்கம் விலை சவரனுக்கு 600 ரூபாய் அதிகரிப்பு

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2022      வர்த்தகம்
Image Unavailable

கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போரால் கடந்த 24-ந்தேதி தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,856 உயர்ந்து ரூ.39 ஆயிரத்து 608 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மறுநாள் தங்கம் விலை ரூ.38 ஆயிரத்து 472 ஆகவும் அதற்கு அடுத்தநாள் (சனிக்கிழமை) ரூ.37 ஆயிரத்து 904 ஆகவும் குறைந்தது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

இந்த நிலையில் தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.4,813 ஆக விற்பனையானது. ஒரு பவுன் ரூ.37,904-ல் இருந்து ரூ.38,504 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. இதே போல் வெள்ளி விலையும் நேற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69-ல் இருந்து ரூ.70.10 ஆகவும், ஒரு கிலோ ரூ.69 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரத்து 100 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து