முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றத்திற்கு தயாராகுங்கள் - சூர்யா வேண்டுகோள்

திங்கட்கிழமை, 7 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

ஜெய் பீம் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். டி இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சூர்யாவுடன் பிரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, தேவதர்ஷினி, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய சூர்யா,  ஜெய்பீம் படம் சிலருக்கு சங்கடங்களை ஏற்படுத்தியது, அதை சரிப்படுத்த முயன்றோம். இழப்பதற்கு நாம் தயாராக இருந்தால் அடைவதற்கு ஏராளம் உள்ளது. மாற்றத்திற்கு நாம் தயாராக வேண்டும். எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நினைவில் கொள்வோம். உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும். அதற்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்று கோரிக்கை விடுத்து பிரார்த்தனை மேற்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து