முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபுதேவாவின் ரேக்ளா

திங்கட்கிழமை, 14 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும்  திரைப்படம் 'ரேக்ளா'. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை, 'வால்டர்' பட இயக்குநர் அன்பு இயக்குகிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் 'ரேக்ளா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன், சி. வி. குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி மற்றும் கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படப்பிடிப்பை இயக்குநர் மிஷ்கின் கிளாப் அடித்து தொடங்கிவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!