முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாறன் விமர்சனம்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

துருவங்கள் பதினாறு  பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் மாறன். கதை - தனுஷின் அப்பா ராம்கி ஒரு நேர்மையான பத்திரிகையாளர். அவர் கல்வித் தந்தை ஒருவரின் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக கொலை செய்யப்படுகிறார். அப்போது சிறுவனாக இருக்கும் தனுஷ் தனது தங்கை ஸ்மிருதி வெங்கட்டுடன் தன் மாமா நரேணின் அரவணைப்பில் வளர்கிறார். பின்னாளில் அப்பா போலவே தனுஷும் ஒரு நேர்மையான பத்திரிகையாளராக உருவெடுக்கிறார். இந்நிலையில் முன்னாள் அமைச்சரான சமுத்திரக்கனியின் சதிவேலையை தனது பத்திரிக்கையில் தனுஷ் அம்பலப்படுத்துகிறார். அதனால் தனுஷின் தங்கை எரித்துக் கொல்லப்படுகிறாள். கொன்றவரை எப்படி பழி வாங்கினார் என்பதே படத்தின் மீதிக் கதை. இப்படத்தில் தனுஷின் நடனமும் நடிப்பும் பாராட்டு பெறுகிறது. தனுஷின் தங்கையாக வரும் ஸ்மிருதி வெங்கட் எதார்த்த நடிப்பைக் கொடுத்துள்ளார், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி ஆகியோரின் நடிப்பிலும் பெரிய சுரத்தையில்லை. படத்தின் கிளைமாக்சில் அமீர் வரும் காட்சிகளும் வசனங்களும் வாழ்க்கையின் எதார்த்தத்தை சொல்கிறது. பத்திரிக்கையாளர்களாகிய நீங்க பாட்டுக்கு ஊழலை அம்பலப்படுத்துறேன்னு எதையாவது செய்வீங்க. அதனால நாங்க இங்க பாதிக்கப்படுறோம் என்று நியாயமான கேள்வியைக் கேட்பது நமக்கும் கூட திகைப்பை ஏற்படுத்துகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் அண்மையில் வெளியாகி உள்ளது 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து