முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுகிறது : தி.மு.க. அரசு மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 16 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

Source: provided

திருச்சி : அ.தி.மு.க.வை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுவதாக தி.மு.க. அரசு மீது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார். எத்தனை வழக்கு போட்டாலும் சரி, அதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் அஞ்சமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வழக்குகளில் கைதாகி நிபந்தனை ஜாமினில் விடுதலையான அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் நேற்று இரண்டாவது நாளாக நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட பொய் வழக்கு காரணமாக மேலாண்மை நீதிமன்றம் எனக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி இதனடிப்படையில் நேற்று இரண்டாவது நாளாக திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு இருக்கிறேன். இந்த விடியா தி.மு.க. அரசுக்கு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கில்லை.

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். குறிப்பாக அ.தி.மு.க.வை ஒழித்துக்கட்ட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு கழக முன்னாள் அமைச்சர்கள், முன்னோடிகள் கழகத்தொண்டர் கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். இந்த இயக்கத்தை அழித்து விட லாம் என்ற இருமாப்பில் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

இந்த ஒன்பது மாத கால ஆட்சியில் கிஞ்சிற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக கடந்த ஜெயலலிதா ஆட்சியில் திருச்சி மாநகரில் ரூ.ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வரப்பட்டது. 2019 முதல் திட்டப்பணிகள் சிறப்பாக நடந்து வந்தன. இப்போது அந்தப் பணிகள் நத்தை வேகத்தில் நடக்கின்றன. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

இந்த ஆட்சியாளர்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். சட்டம், ஒழுங்கை பராமரிக்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தி.மு.க. அரசு அ.தி. மு.க.வை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற ஒரே கருத்துடன் செயல்பட்டு வருகிறது.

1972-ல் எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை உருவாக்கிய போது சொல்ல முடியாத அளவுக்கு பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆட்சிக்கு வரவிடாமல் பல வழக்குகளை போட்டார்கள். அதையெல்லாம் மீறி எம்.ஜி.ஆரை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள். முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டிலிருந்து கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தவறான வி‌ஷம பிரசாரம் செய்கிறார்கள். திரும்பத் திரும்ப அதை சொல்லும் போது இயக்கம் மீது மக்களுக்கு கெட்ட பெயர் உருவாகும் என்று நினைக்கிறார்கள்.

நான் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றுதான் நீதிமன்றம் எனக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. பேட்டி அளிக்க கூடாது என்று சொல்லவில்லை. என்னை மட்டுமல்ல ஒன்றரை கோடி தொண்டர்களையும், தமிழக மக்களின் வாயையும் மு.க.ஸ்டாலினால் மூட இயலாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்தது. எத்தனை வழக்கு போட்டாலும் சரி, அதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் அஞ்சமாட்டார்கள். நீதிமன்றத்தின் மூலம் நீதியை நிலை நாட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து