முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் ஒரு பக்கம் கனமழை; மறுபக்கம் உயர் வெப்ப அலை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2022      இந்தியா
Meteorological 2022 04 01

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும் என்றும், நாட்டின் இதர பகுதிகளில் அனல் கொளுத்தும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களாக அசாம், மேகாலயம், அருணாசலம், நாகாலாந்து, மணிப்பூர், சிக்கிம், மேற்கு வங்கத்தின் ஒரு பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, அசாம், மேகாலயம், அருணாசலப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும்; நாகாலாந்து, மணிப்பூர் பகுதிகளில் சிக்கிமில் ஞாயிறு மற்றும் திங்களன்று கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, இமாசலம், தெற்கு ஹரியானா, தில்லி, தென்மேற்கு உ.பி., குஜராத், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இருந்த போதும் ஒரு சில இடங்களில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், மன்னார் வளைகுடா உள் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழை வரும் 4ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மட்டுமே பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், தினமும் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் சில மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து