முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி: நாளை மறுதினம் அன்னை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்

சனிக்கிழமை, 9 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Meenashi 2022 04 06

Source: provided

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் 6-ம் நாளான இன்று ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். நாளை மறுதினம் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

மதுரை மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றான சித்திரைப் பெருவிழா  அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 4-ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இப்பெருவிழா நடைபெறாமல் இருந்தது. கொரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை அடுத்து நடப்பாண்டில் இப்பெருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று 9-ம் தேதி திருவிழாவின் ஐந்தாம் நாள் காலையில் சுவாமியும், அம்மனும் வடக்குமாசி வீதி ராமாயண சாவடியில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். மாலை குதிரை வாகனங்களில் புறப்பட்டு சுவாமியும், அம்மனும் கோவிலை அடைந்தனர். இன்று 10-ம் தேதி ஆறாம் நாளில் ரிஷப வாகனத்திலும், நாளை 11-ம் தேதி ஏழாம்நாள் நந்தீஸ்வரர் யாளி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 

தொடர்ந்து 12-ம் தேதி எட்டாம் நாள் திருவிழாவாக பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது.  வரும் 13-ம் தேதி திருவிழாவின் ஒன்பதாம் நாளில் திக்குவிஜயம் நடக்கிறது. அதை தொடர்ந்து 14-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 15-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து