முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மக்களுக்கு தமிழக காங்கிரஸ் ரூ.10 லட்சம் நிதியுதவி : கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

புதன்கிழமை, 4 மே 2022      தமிழகம்
KS-Alagiri 2022 02 09

Source: provided

சென்னை : இலங்கை மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு முதல்வர்  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். மேலும் இலங்கை மக்களுக்கு உதவ ரூ. 800 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி அனுப்பும் முதல்வர்  மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை பாரட்டத்தக்கது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!