முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைக்குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்கள் வசதிக்காக ரெயில்களில் குழந்தை படுக்கை வசதி அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2022      இந்தியா
Railway 2022 05 10

Source: provided

புதுடெல்லி : கைக்குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக ரெயில்களில் குழந்தை படுக்கையை ரெயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

கைக்குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக ரெயில்களில் குழந்தை படுக்கையை ரெயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அன்னையர் தினத்தன்று புதிய படுக்கை வசதிகள் தொடங்கப்பட்டன. அவை மடிக்கக்கூடியவை மற்றும் ஸ்டாப்பர் பொருத்தப்பட்டவை ஆகும். குழந்தைகளைப் பாதுகாக்க படுக்கையுடன் உள்ள பெல்ட்டுகளை  எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை விளக்கும் வீடியோக்களை அதிகாரிகள் டுவீட் செய்துள்ளனர்.

ரெயில்வே துறை இந்த படுக்கை வசதிகளை பரிசோதித்து வருகிறது, அவை குறிப்பிட்ட ரெயில்களில் மட்டுமே கிடைக்கும். குழந்தை படுக்கைகளை  அறிமுகப்படுத்துவது வடக்கு ரெயில்வேயின் லக்னோ மற்றும் டெல்லி பிரிவுகளின் கூட்டு முயற்சியாகும். ரெயில்வே வாரிய கூட்டத்தின் போது  என்ஜினியர் ஒருவர் இந்த யோசனை தெரிவித்தார் என்று லக்னோ கோட்ட ரெயில்வே மேலாளர் சுரேஷ் குமார் சப்ரா தெரிவித்துள்ளார்.

ரெயில்வே வாரியத்தின் சமீபத்திய மறுஆய்வுக் கூட்டத்தில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த  என்ஜினியர்  நிதின் தியோரின் இந்த் யோசனையை கூறினார். இது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். இந்த யோசனைக்கு குழந்தை படுக்கை வடிவத்தில் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். பயணிகளிடம் இதற்கு வரவேற்பு இருந்தால் ரெயில்வே அனைத்து ரெயில்களிலும் குழந்தை படுக்கை வசதிகளை வழங்கும் என்று சப்ரா மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து