முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில் குடும்பத்தினரின் தலையீடு : நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ். கோரிக்கை

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
OPS 2022 01 28

Source: provided

சென்னை : அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில் அவர்களது கணவர்களோ அல்லது உறவினர்களோ தலையிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 34-வது வார்டு பெண் கவுன்சிலர் ஷர்மிளா காந்தியின் கணவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கவுன்சிலர் அலுவவகத்திற்கு வந்து மக்களை மிரட்டுவது போன்ற வீடியோவும், தாம்பரம் மாநகராட்சி 31-வது வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலர் சித்ரா தேவியின் மைத்துனர் தனது ஆதரவாளர்களுடன் சென்று உணவுக் கடை உரிமையாளரை மிரட்டியது போன்ற புகாரும் வெளிவந்த நிலையில் தி.மு.க. பெண் கவுன்சிலர்கள், பெண் நகரமன்றத் தலைவர்கள், பெண் மாநகராட்சி மேயர்களுக்கான பணிகளை அவர்களது கணவர்கள் தான் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. 

இந்த நிலையில், மதுரை மாநகராட்சியில், மேயர் இந்திராணியின் கணவர் மற்றும் உறவினர்களின் ஆதிக்கம் மாநகராட்சியில் ஓங்கி இருக்கிறது என்றும் தி.மு.க. கவுன்சிலர்களே இது குறித்து அதிருப்தியில் உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இது குறித்து முதல்வர், உடனடியாக தலையிட்டு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில், அவர்களது கணவர்களோ அல்லது உறவினர்களோ அல்லது அடியாட்களோ தலையிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து