முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: சதுரங்க கூட்டமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
CM-1 2022-05-14

Source: provided

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (14.05.2022) சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று  44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி நடத்துவது தொடர்பாக தமிழக அரசு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.  

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியானது  மாமல்லபுரத்தில்  28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.  மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று தமிழக அரசு மற்றும் இந்திய சதுரங்க கூட்டமைப்பினரிடையே  கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து, 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டியில் பங்கேற்கவுள்ள சதுரங்க வீரர்,  வீராங்கனைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.   

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன்,  தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா,   தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர். இரா.ஆனந்தகுமார், சதுரங்கப் போட்டிக்கான சிறப்பு அலுவலர் டாக்டர். தாரேஸ் அஹமத், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். சஞ்சய் கபூர், செயலாளர் பரத் சிங் சவுகான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!