முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி தீ விபத்தில் 30 பேர் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
Stalin 2022 01 28

Source: provided

சென்னை : டெல்லியில் 4 மாடி வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 30பேர் பலியாயினர். அவர்களது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே 4 மாடி வணிக கட்டிடம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ விபத்தில் இதுவரை மொத்தம் 27 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.   இந்த தீ விபத்தில் 12 பேர் காயமடைந்து உள்ளனர்.  50 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன பலரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலியானவர்களில் 25 பேரின் உடல்களை இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 

இந்த நிலையில் தீ விபத்துக்கு பிறகு 3 மாடி கட்டிடத்தில் இருந்த 19 பேரை காணவில்லை எனறு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தீயில் கருகி பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்கள் அங்கிருந்து தப்பி குதித்து சென்றார்களா, அவர்களது நிலை என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தீ விபத்து நடந்த கட்டிடத்தில் உள்ள 2 கம்பெனியின் உரிமையாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதற்கிடையே அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மனிஷ் லகரா தப்பி ஓடி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர் கட்டிடத்திற்கு தீயணைப்பு துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில் டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

டெல்லி தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!