முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அணியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      விளையாட்டு
Chennai-team 2022 05 15

Source: provided

மும்பை : ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. பிளே ஆப் ரேஸ்-யில் இருந்து சென்னை அணி ஏற்கனவே வெளியேறியுள்ளது.

நேற்று நடைபெற்ற 62-வது லீக் போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணியின் தொடக்க தொடக்க வீரர்களாக டேவான் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர் 

குஜராத் அணியின் ஷமி வீசிய 2வது  ஓவரில் கான்வே 5 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் 

பின்னர் வந்த மொயீன் அலி ருதுராஜுடன் இணைந்து நிலைத்து ஆடினார் .இருவரும் பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு விரட்டினர் .மொயீன் அலி 21 ரன்களில் ஆட்டமிழந்தார் .

பின்னர் வந்த தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார் 

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 44  பந்துகளில் அரைசதம் அடித்தார் .அதன்பிறகு அவர் 53  ரன்களில் ஆட்டமிழந்தார் .

பின்னர் சிவம் துபே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் .இதனால் சென்னை அணியின் ரன் வேகம் மந்தமானது .கடைசி 5 ஓவரில் சென்னை அணி ஒரு பவுண்டரி ,சிக்சரும் அடிக்கவில்லை 

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது .தொடர்ந்து 134 ரன்கள் இலக்குடன் குஜராத் அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக சுப்மன் கில் ,விருத்திமன் சஹா களமிறங்கினர் .இருவரும் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர் .தொடக்க விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தனர் .பிறகு சுப்மன் கில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த மேத்யூ வேட் 20 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் .மறுபுறம் சிறப்பாக விளையாடிய சஹா அரைசதம் அடித்தார் .அவர் 67 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் .

இறுதியில் குஜராத் அணி  19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது .இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!