முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரங்கா விமர்சனம்

திங்கட்கிழமை, 16 மே 2022      சினிமா
Ranga-Review 2022 05 16

Source: provided

அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் சிபி ராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரங்கா’. இந்த படத்திற்கு ராம் ஜீவன் இசையமைத்துள்ளார். கதை, நாயகன் சிபி சத்யராஜ் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு ஒரு வித்தியாசமான நோய் உள்ளது. சில நேரங்களில் அவரை அறியாமலேயே அவருடைய வலது கை செயல்படும். அவருடைய வலது கையில் ஸ்மைலி பந்து ஒன்று இருந்தால் மட்டுமே அக் கை அவரது மூளைக்கு கட்டுப்பட்டு இருக்கும். இந்நிலையில் சிபி ராஜ் பணிபுரியும் அலுவலகத்திற்கு நிகிலா பணியில் சேருகிறார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் முடிந்து ஹனி மூனுக்கு செல்கின்றனர். அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் ரகசிய கேமராக்களை வைத்து படம் எடுப்பதை சிபிராஜ் கண்டுபிடிக்கிறார். இதனால் வில்லனுக்கும் சிபிராஜுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ் வில்லன் கூட்டத்திடம் சிக்கிய பிறகு பயந்து ஓடும் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். நாயகி நிகிலா விமலுக்கு சொல்லும்படியான காட்சிகள் இல்லையென்றாலும் அளவான நடிப்பை கொடுத்துள்ளார். வில்லனாக வரும் மோனிஷ் ரஹேகாவுக்கும் பெரிதாக காட்சிகள் எதுவும் இல்லை. சிபியின் நண்பனாக வரும் சதீஷ் சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார். ஒளிப்பதிவு சிறப்பு. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து