முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜெ ரமணன் இயக்கும் ஷூட்டிங் ஸ்டார்

திங்கட்கிழமை, 16 மே 2022      சினிமா
MJ-Ramanan 2022 05 16

Source: provided

ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் தயாரிப்பில் எம் ஜெ ரமணன் இயக்கத்தில் உருவாகும் நகைச்சுவை திரைப்படம் ஷூட்டிங் ஸ்டார். எம் ஜெ ரமணன், ஜானி டூகல், வினம்பர சாஸ்திரி ஆகிய மூவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். துஷ்யந்த், விவேக் பிரசன்னா, சீனிவாச ரெட்டி, ரவி கிஷன், மாஷூம் சங்கர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பல ஏமாற்றங்களை சந்தித்த ஒருவனை, அவனை சுற்றியுள்ளவர்கள் மேலும் மேலும் எப்படியெல்லாம் ஏமாளி ஆக்குகிறார்கள் என்பதே இப்படத்தின் கதை என்றும் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்கள் இப்படத்தில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கிறார் இயக்குனர் எம் ஜெ ரமணன். படத்துக்கு இசை அம்ஜத் நதிம் ஆமீர். ஒளிப்பதிவு எஸ் ஆர் சதீஷ்குமார்.  கலை இயக்குநராக சேத்தன் பாடக், எடிட்டராக சசிக்குமார், ஸ்டண்ட் மாஸ்டராக கனல் கண்ணன், நடன இயக்குராக விஷ்ணு தேவா ஆகியோர் இப்படத்தில் பணிபுரிகிறார்கள். படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் துவங்கி சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் கஜுராஹோ பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து