முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமல் திறந்து வைத்த ஐசரிவேலன் சிலை

திங்கட்கிழமை, 16 மே 2022      சினிமா
Kamalhasan 2022 05 16

Source: provided

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் துணை அமைச்சராக இருந்த ஐசரி வேலனின் நினைவு நாளில், அவரது உருவச்சிலையை கமலஹாசன் திறந்து வைத்தார். சென்னை அடையாறு எம்.ஜி.ஆர்.- ஜானகி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ், கவுண்டமணி, பிரபு, பிரசாந்த், லதா, ராதிகா, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஐசரி வேலனின் சிலையை திறந்து வைத்து பேசிய கமலஹாசன், பதவியும், பொறுப்பும் கிடைத்த பிறகும் நடிக்க வந்தவர் ஐசரி வேலன். பல நினைவுகளை இந்த மேடை உருவாக்குவதாக குறிப்பிட்ட அவர், நினைவுகளை யோசித்துப் பார்த்தால் கடந்து வந்த தூரம் எவ்வளவு என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று கூறினார். ஜசரி வேலனின் 35-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது மகனும் கல்வியாளருமான ஐசரி கணேஷ் நலிவடைந்த 1000 கலைஞர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!