முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐங்கரன் விமர்சனம்

திங்கட்கிழமை, 16 மே 2022      சினிமா
GV-Prakash 2022 05 16

Source: provided

ஈட்டி பட இயக்குனர் ரவி அரசின் அடுத்த படைப்புதான் ஐங்கரன் படம். நாயனாக நடித்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். கதை, வடமாநில கொள்ளையர்கள் சிலர் தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளை குறி வைத்து சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களைக் கொள்ளையடிக்கிறார்கள். அவர்கள் கொள்ளையடித்த நகை மூட்டை எதிர்பாராத விதமாக ஒரு ஆழ்துளை கிணற்றில் விழுந்து விடுகிறது. அதை எடுப்பதற்காக ஒரு குழந்தையை கடத்தி அந்த ஆழ்துளை கிணற்றில் போடுகிறார்கள்.  அப்போது உள்ளூர் விஞ்ஞானியான ஜி.வி.பிரகாஷ் புதிய இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து குழந்தையை மீட்க முயற்சி செய்கிறார். ஆனால் கொள்ளைக் கும்பலுக்கு துணை போகும் காவல் அதிகாரி அதற்கு தடை போடுகிறார். அதன் பிறகு நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் படத்தின் கதை. படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கதையை விறுவிறுப்பாக நகர்தியிருக்கிறார் இயக்குனர் ரவிஅரசு. நாயகன் ஜி வி பிரகாஷ் எல்லா காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். சண்டைக் காட்சிகளில் ஒரு படி மேலே போயிருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சித்தார்த் சங்கர் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார். நாயகி மஹிமாவுக்கு பெரிய வேலை எதுவும் இல்லை. காளிவெங்கட், ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட நடிகர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சமகாலத்தின் தேவையை படத்தில் சரியாகச் சொல்லிருப்பதால் இந்த ஐங்கரனை வரவேற்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து