முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளங்கலை மருத்துவ நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

திங்கட்கிழமை, 16 மே 2022      தமிழகம்
Neet 2022 03 12

Source: provided

புதுடெல்லி  : இளங்கலை மருத்துவ நீட் தேர்வுகான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. 2022-23-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

மே மாதம் 6-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மே 15ஆம் தேதி வரை விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினத்துடன் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 20-ம் தேதி இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை நீட் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.a

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!