முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 46 கோடியில் 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
CM-1 2022-05-17

Source: provided

சென்னை : சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை  தொடங்கி வைப்பதன் இரண்டாம் கட்டமாக 46 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

2021-2022-ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த 389 புதிதாக நடமாடும் மருத்துவக் குழு வாகனங்கள் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் ஒரு வாகனத்திற்கு தலா ரூபாய் 18 லட்சம் செலவில் தமிழகத்தில் உள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனத்தை மாற்றுவதற்கு ரூபாய் 70.02 கோடி நிதியினை தேசிய நலவாழ்வு குழுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக  389 வாகனங்கள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மூலம் வாங்கப்பட்ட 389 வாகனங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, அதன் சேவையை தொடங்கி வைக்கும் அடையாளமாக, முதற்கட்டமாக 133 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்வர் 8.4.2022 அன்று தொடங்கி வைத்தார். 

அதன்  தொடர்ச்சியாக நேற்று இரண்டாவது கட்டமாக 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்வர் தொடங்கி வைத்து பார்வையிட்டு, நடமாடும் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் செய்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும்  மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து