முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா பல்கலை.யில் 20-ம் தேதி வரை பேரிடர் நிகழ்வு மீட்பு குறித்த பயிற்சி : மேலாண்மை இயக்குனர் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
Kandasamy 2022-05-17

Source: provided

சென்னை : தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை  ஆகியவை இணைந்து சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முத்தையன் கலையரங்கத்தில் நேற்று முதல் வரும் 20-ம் தேதி வரை பேரிடர் நிகழ்வு மீட்பு அமைப்பு குறித்தான பயிற்சியினை நடத்துகின்றன.

இந்த பயிற்சியினை பேரிடர் மேலாண்மை இயக்குநர் கந்தசாமி துவக்கி வைத்து பேசுகையில், பல்வேறு வகையான பேரிடர்களின் போது எவ்வாறு உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும்  மேலும் இப்பயிற்சியினை மேற்கொள்ளும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், மாவட்டங்களில் உள்ள தங்களது துறை அலுவலர்களுக்கு பயிற்சியளிப்பார்கள் என்றும் தமிழகத்தில் பேரிடர்களை எதிர்கொள்ள ஒரு சிறப்பான பேரிடர் நிகழ்வு மீட்பு அமைப்பு உருவாக்கப்படவிருக்கிறது என்றும் கூறினார். 

இப்பயிற்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்  துறை, காவல்துறை, தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு ஆகியவற்றை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக பேரிடர் மேலாண்மை துறை இணை இயக்குநர் முத்துக்குமரன் வரவேற்புரை நிகழ்தினார். தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர் அருண்வர்மா மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் பொறியியல் துறையின் பேராசிரியர் டாக்டர். குரியன் ஜோசப் ஆகியோர் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!