முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் ஒரு மாதத்திற்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்தது

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      இந்தியா
India-Corona 2022 03 15

Source: provided

புதுடெல்லி : நாட்டில் ஒரு மாதத்திற்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்ததுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 2,467 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 84 ஆயிரத்து 710 ஆக உயர்ந்தது.

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 3-வது நாளாக குறைந்துள்ளது. நேற்று வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,569 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 14-ந்தேதி பாதிப்பு 2,858 ஆக இருந்தது. மறுநாள் 2,487 ஆகவும், நேற்று முன்தினம் 2,202 ஆகவும் இருந்த நிலையில் நேற்று மேலும் குறைந்துள்ளது.

கடந்த மாதம் 19-ந்தேதி பாதிப்பு 1,247 ஆக இருந்தது. மறுநாள் 2 ஆயிரத்தை கடந்தது. இந்தநிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு தினசரி பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 25 ஆயிரத்து 370 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் மேலும் 19 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 18 மரணங்கள் சேர்க்கப்பட்டதும் அடங்கும். இதுதவிர நேற்று முன்தினம் டெல்லியில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,24,260 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 2,467 பேர் தற்போதுமீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 84 ஆயிரத்து 710 ஆக உயர்ந்தது. தற்போது 16,400 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 917 குறைவு ஆகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!