முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லிக்கு எதிராக நாங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாடவில்லை: தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      விளையாட்டு
Punjab 2022 05 17

நாங்கள் எங்களின் சிறப்பான ஆட்டத்தை ஆடவில்லை என்று டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் விளக்கமளித்துள்ளார். 

பரபரப்பாக...

ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. நவி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டீல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. 

பஞ்சாப் தோல்வி...

முதலில் பேட்டிங் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது,தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேஸ் செய்யக்கூடிய... 

இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் பேசியதாவது., 5-10 ஓவர்களுக்கு  இடையில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்தோம், அங்குதான் நாங்கள் ஆட்டத்தை இழந்தோம். எங்களிடம் உள்ள பேட்டிங்கிற்கு இது நிச்சயமாக, சேஸ் செய்யக்கூடிய இலக்கு தான். இன்னும் ஒரு போட்டி உள்ளது. அதில்  சிறந்த கிரிக்கெட் விளையாட வேண்டும். இன்னும் எங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை, கடைசி ஆட்டத்தில் அதைச் செய்ய எதிர்நோக்குகிறோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!