முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

31 ஆண்டு கால வலி, வேதனையை எனது மகன் கடந்து வந்து விட்டார் : தாயார் அற்புதம் அம்மாள் நெகிழ்ச்சி

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
Arputam-1 2022 05 18

Source: provided

சென்னை : 31 ஆண்டு கால வலியையும் வேதனையையும் என் மகன் கடந்து வந்துவிட்டார்" என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்தார்.

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து ஜோலார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவரின் தயார் அற்புதம் அம்மாள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "இன்றைய தினம் உச்ச நீதிமன்றம் முழுமையாக பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. எங்களது போராட்டம் 31 ஆண்டு கால போராட்டம். வெளிப்படையாகத்தான் இந்த போராட்டம் நடைபெற்றது. இது அனைவருக்கும் தெரியும்.

இந்த 31 ஆண்டு காலம் ஒரு மனிதனின் வாழ்க்கை சிறைக்குள் கழிந்ததுள்ளது. ஒரு நிமிடம் யோசித்தால்தான் அதன் வலி, வேதனை புரியும். இதைக் கடந்த வந்துவிட்டார் என் மகன். தொடர்ந்து அரசு எனது மகனுக்கு பரோல் கொடுத்தது. பெயில் கொடுத்தது.

அதனால்தான் அவரின் உடல் நிலையை நன்றாக கவனிக்க முடிந்தது. இது எனக்கு பெரிய மகிழ்ச்சி. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விடுதலைக்கு குரல் கொடுத்த எல்லாருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து