முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப நான் அதிகமாக உழைக்கிறேன்: மனம் திறந்தார் சி.எஸ்.கே கேப்டன் டோனி

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      விளையாட்டு
Dhoni 2022-05-20

ஐ.பி.எல் போட்டியில் அடுத்த வருடம் விளையாடுவது குறித்து தெரிவித்த சென்னை கேப்டன் டோனி நிச்சயமாக அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப நான் இன்னும் அதிகமாக உழைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

பேட்டிங் தேர்வு...

மும்பை, மும்பை பிரபோர்னே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 68-வது ஐ.பி.எல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறினாலும் ஆறுதல் வெற்றி பெரும் முனைப்புடன் சென்னை அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

பார்க்க முடியுமா ?

அப்போது வர்ணனையாளர் இயான் பிஷப் டோனிடம், "அடுத்த வருடம் தங்களை சென்னை அணியில் பார்க்க முடியுமா என கேள்வி எழுப்பினார்?" . அதற்கு பதில் அளித்த டோனி, "நிச்சயமாக , அதற்கு மிகவும் எளிய காரணம் தான் உள்ளது. இந்த வருடம் மும்பையில் மட்டும் விளையாடிவிட்டு சென்னை ரசிகர்களுக்கு நன்றி சொல்லாமல் இருப்பது நன்றாக இருக்காது. 

நன்றி தெரிவிக்கலாம்... 

மும்பையில் எனக்கு ஒரு அணியாகவும் தனி மனிதனாகவும் நிறைய அன்பும் பாசமும் கிடைத்தது. ஆனாலும் சி.எஸ்.கே ரசிகர்களிடம் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. அடுத்த ஆண்டு வெவ்வேறு இடங்களில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும். அப்போது ஒவ்வொரு மைதானத்திற்கும் சென்று அனைவருக்கும் நன்றி தெரிவிக்கலாம். 

கணிக்க முடியாது... 

இது எனது கடைசி ஆண்டாக இருக்குமா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்வி. ஏனென்றால் இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னர் நடக்கப்போவது பற்றி இப்போதே கணிக்க முடியாது. ஆனால் நிச்சயமாக நான் அடுத்த ஆண்டு இன்னும் வலுவாக திரும்ப வருவதற்கு கடினமாக உழைக்கிறேன்," என்று டோனி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!