முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் : இந்திய அணி அறிவிப்பு : கே.எல்.ராகுல் கேப்டனாக நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      விளையாட்டு
KL-Rahul 2022-05-01

Source: provided

மும்பை : ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 20 ஓவர் போட்டி நடக்கிறது.ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை போட்டிகள் நடக்கிறது.ஜூன் 9 அன்று டெல்லியில் போட்டி தொடங்கும். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ,விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது . இதனால் இந்த தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .ரிஷாப் பண்ட் ,துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .தினேஷ் கார்த்திக் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார் .புதிதாக (அறிமுக வீரர்கள் ) உம்ரான் மாலிக் ,அர்ஷ்தீப் சிங் அணிக்கு தேர்வாகியுள்ளனர்

இந்திய அணி ; கே.எல். ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் அய்யர் , ரிஷாப் பண்ட் , தினேஷ் கார்த்திக் , ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஆர் பிஷ்னோய் , புவனேஷ்வர் குமார் , ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!