எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ், மொத்தம் 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் பெங்களூரு அணிக்காக மட்டும் அவர் 156 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2011 முதல் 2021 வரையில் பெங்களூரு அணியில் அவர் இடம் பெற்றிருந்தார். நடப்பு சீசனில் அவர் விளையாடப் போவதில்லை என முன்னதாகவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த சீசனில் (ஐபிஎல் 2023) தனது வருகை குறித்து பேசியுள்ளார் டிவில்லியர்ஸ்.
"அடுத்த சீசனில் நான் நிச்சயம் இருப்பேன். ஆனால் அது எப்படி என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை. இதனை விராட் கோலி உறுதிப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி. வரும் சீசனில் பெங்களூருவில் சில போட்டிகள் இருக்கும். அதனால் எனது இரண்டாவது வீட்டுக்கு திரும்புவதில் எனக்கு மகிழ்ச்சி. சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வாழும் அந்த காட்சியை காண நாம் மிகவும் ஆர்வமாக உள்ளேன். அணியில் மீண்டும் இணைவதை நான் மிகவும் விரும்புகிறேன். அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்தும் உள்ளேன்" என தெரிவித்துள்ளார் டிவில்லியர்ஸ்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா தோல்வி..!
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகா, அமெரிக்காவைச் சேர்ந்த அமெண்டா அனிசிமோவாவை எதிர்கொண்டார்.
இதில் நவோமி ஒசாகா 5-7, 4-6 என்ற நேர் செட்களில் அனிசிமோவாவிடம் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.
பெண்கள் டி20 கிரிக்கெட்: சூப்பர் நோவாஸ் வெற்றி
3 அணிகள் இடையிலான பெண்கள் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் முதல் லீக் ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான டிரையல்பிளேசர்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணிகள் சந்தித்தன. டாஸ் ஜெயித்த சூப்பர்நோவாஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட்செய்த சூப்பர் நோவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்மன்பிரீத் கவுர் 37 ரன், ஹர்லின் தியோல் 35 ரன், டாட்டின் 32 ரன்கள் எடுத்தனர்.
அதன்பின், 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரையல் பிளேசர்ஸ் ஆடியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். இறுதியில் டிரையல் பிளேசர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சூப்பர் நோவாஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூப்பர் நோவாஸ் சார்பில் பூஜா வஸ்த்ராசாகர் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேசம் 277 ரன்கள் குவிப்பு
இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது வங்காளதேசம். 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சதமடித்து அசத்தினர். முதல் நாள் முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.
போட்டியின் 23-வது ஓவரில் பீல்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் குசால் மென்டிஸ் நெஞ்சு வலிப்பதாக கூறினார். அணியின் உதவியாளர்கள் உதவியுடன் வெளியேறிய அவர், டாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் இதயத்தில் பிரச்சினை எதுவும் இல்லை, தசைப்பிடிப்பு தான் வலிக்கு காரணம் என தெரிய வந்ததால் இலங்கை அணி நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது.
எந்த மைதானத்திலும் சிறப்பாக ஆடுவோம்: சஹா நம்பிக்கை
24-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் “பிளேஆப்” சுற்று ஆட்டம் நேற்று தொடங்கியது. கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் நான்கு நாட்களுக்கு முன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்தன. பிளேஆப் சுற்றின் ‘குவாலிலையர் 1’ ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்தது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாஞ்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த நிலையில் எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-குஜராத் அணிக்காக நான் விளையாடுகிறேன். எனவே எனது சொந்த மைதானம் அகமதாபாத் மொதேரா ஸ்டேடியம் ஆகும். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக நான் நீண்ட காலம் ஆடவில்லை. இதனால் ஈடன் கார்ன் எனது சொந்த மைதானம் அல்ல. எந்த மைதானத்திலும் குஜராத் அணி சிறப்பாக விளையாடும். ந்திய அணிக்கான தேர்வு குறித்து நான் நினைக்கவில்லை. இவ்வாறு விர்த்திமான் சஹா கூறியுள்ளார்.
இந்தோனேஷியாவில் ஹாக்கி: இந்தியா - பாக். ஆட்டம் டிரா
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் தொடங்கிய இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இதன் 9-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அறிமுக வீரரான செல்வம் கார்த்தி கோல் அடித்தார். தமிழகத்தின் அரியலூரைச் சேர்ந்த செல்வம் கார்த்தி அடித்த கோலால் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இதன் பின்னர் இரு அணிகள் தரப்பில் கோல் அடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இரு அணி வீரர்களுமே பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றத் தவறினர். போட்டி முடிவடைய ஒரு நிமிடமே இருந்த நிலையில் பாகிஸ்தான் வீரர் ராணா கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமநிலையை எட்டியது. இதற்கு பதிலடி கொடுக்க இந்திய அணி வீரர்கள் முயன்ற போதிலும் சாத்தியமாகவில்லை. முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந் தது. இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று ஜப்பானுடன் மோதுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசு
21 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
வைகை அணையில் உபரி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை : ஆற்றுக்குள் இறங்க, குளிக்க தடை
21 Oct 2025ஆண்டிபட்டி : வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.