முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் வரும் 3-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தே.மு.தி.க. அறிவிப்பு

புதன்கிழமை, 25 மே 2022      தமிழகம்
Vijayakant 2022-05-25

Source: provided

சென்னை : சென்னையில் வரும் 3-ம் தேதி தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் கட்சித் தலைவர் பொதுச்செயலாளர் விஜயகாந்தின்  ஆணைக்கிணங்க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  தலைமையில் ஜூன் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.

கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!