முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சனிக்கிழமை, 28 மே 2022      தமிழகம்
Weather-Center 2021 06-30

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக பகுதிகளில் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக,  29.05.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30.05.22, 31.05.22, 01.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ) வீரகானூர், வேப்பூர் தலா 5, ஸ்ரீமுஷ்ணம், வால்பாறை, திருமயம் தலா 4, சீர்காழி, செந்துறை, கரூர், வி.களத்தூர், ஜமுனாமரத்தூர், வளத்தி, காரையூர், அருப்புக்கோட்டை தலா 3, கோவிலங்குளம், பேரையூர், மேலூர், பெரம்பலூர்இ கோபிசெட்டிபாளையம், எறையூர், தென்பரநாடு, எமரலாடு, அன்னவாசம், சோலையார், அண்ணாமலை நகர் தலா 2, மணல்மேடு, சோழவரம், பூதலூர், பரங்கிப்பேட்டை, வால்பாறை தாலுகா அலுவலகம், மயிலாடுதுறை, தம்மம்பட்டி, சிவகாசி, உதகமண்டலம், சின்கோனா, சோழவரம், கொடைக்கானல் படகு குழாம், தானியமங்கலம், பறளியாறு, ஆலக்கரை எஸ்டேட் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

29.05.22, 30.05.22: லட்ச தீவு, தென் கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் - தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!