முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து பாஜக அரசு செயல்பட்டு வருகிறது: குஜராத்தில் பிரதமர் மோடி உரை

சனிக்கிழமை, 28 மே 2022      இந்தியா
modi-2021-12-28

கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து பா.ஜ.க அரசு செயல்பட்டு வருவதாக குஜராத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று குஜராத் சென்றடைந்தார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை திறந்து வைத்தார். ராஜ்கோட்டின் அட்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதுஸ்ரீ கேடிபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நேற்று திறந்து வைத்து உரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது, 

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாட்டிற்கு சேவை செய்து 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. பல ஆண்டுகளாக, நாங்கள் ஏழைகளுக்கான சேவைக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். 'அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை' என்ற மந்திரத்தை பின்பற்றி நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளோம். அரசின் திட்டங்களை 100 சதவீதம் குடிமக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதற்கான பிரச்சாரத்தை எங்கள் அரசு நடத்தி வருகிறது. 

ஒவ்வொரு குடிமகனுக்கும் வசதிகளை வழங்குவதை இலக்காகக் கொண்டால், பாகுபாடும் முடிவுக்கு வரும், ஊழலுக்கு வாய்ப்பில்லை. நாட்டில் ஏழை மக்கள் ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர் பெண்கள் மற்றும் பலவித பாதிப்புக்கு உள்ளானவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டன. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் மாற்றப்பட்டது. இலவச கேஸ் சிலிண்டர்களையும் ஏற்பாடு செய்தோம். 

தொற்றுநோய் தொடங்கியபோது, ஏழைகள் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கினர். நாட்டு மக்களுக்காக உணவு தானியக் கடைகளைத் திறந்தோம். இலவச தடுப்பூசிகளை வழங்கினோம். 3 கோடிக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு நிரந்தர வீடுகளும், 2.5 கோடிக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு மின்சாரமும், 6 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளன. 

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் கனவுகள் நனவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் மக்கள் வெட்கித்தலைக்குனியும்படி எதையும் செய்யவில்லை" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதனை தொடர்ந்து, மாலை காந்திநகரில் நடைபெறும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்களின் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார். மேலும், கலோலில் ரூ.175 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உலகின் முதல் நானோ யூரியா உற்பத்தி தொழிலர்ச்சாலையை பிரதமர் தொடங்கி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!