முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை தேர்தலில் போட்டி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்: பெங்களூருவில் வேட்புமனு தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2022      அரசியல்
Nirmala 2022-05-31

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட நிர்மலா சீதாராமன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

மாநிலங்களவையில் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதனால் மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு வருகிற 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 4 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். 

கர்நாடகத்தில் சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில் ஆளும் பா.ஜனதாவுக்கு 2 இடங்களும், காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. 4-வது இடத்தில் வெற்றி பெற எந்த கட்சியிடமும் போதுமான வாக்குகள் இல்லை. இதனால் அந்த இடத்திற்கு இழுபறி நீடித்து வருகிறது.

 இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் 2 இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி மேலிடம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அக்கட்சி சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் 2-வது முறையாக கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார். 

இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து