முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 பெண்கள் நீரில் மூழ்கி பலி: ஜனாதிபதி - பிரதமர் இரங்கல்

திங்கட்கிழமை, 6 ஜூன் 2022      இந்தியா
Ram-Modi 2022-06-06

Source: provided

புதுடெல்லி : கடலூர் அருகே ஏ.குச்சி பாளையத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில், 'தமிழகத்தில் கடலூர் அருகே ஆற்றில் உள்ள தடுப்பணையில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கும் சோகமாகும். இந்த சம்பவம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பலியானவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். 

மோடி டுவிட்டரில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், ஏழு சிறுமியர் ஆற்றில் மூழ்கி உயிரிழத்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். இந்த துயர் மிகுந்த வேளையில், அவர்களின் குடும்பங்கள் மன சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!