முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப கமல்ஹாசன் வாழ்த்து

புதன்கிழமை, 22 ஜூன் 2022      தமிழகம்
Kamal 2022-06-22

Source: provided

சென்னை : இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 14ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தேமுதிக கட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பு நண்பர் விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து, முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன். விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்." என்று கமல் கூறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!