முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை பவுனுக்கு 80 ரூபாய் குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2022      வர்த்தகம்
jewelery-2022-06-23

Source: provided

சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,120-க்கு விற்பனையானது. 

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. 

இந்த நிலையில் தங்கம் விலை நேற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ.4,765-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,120-க்கு விற்பனையானது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,312-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை 50 பைசா குறைந்து ரூ.66.00-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.66,000 ஆக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து