முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேச்சு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      தமிழகம்
Venkaiah-Naidu-2022-06-30

அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்கள் தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கேட்டுக்கொண்டார். 

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் சார்பில் திருப்போரூர் அருகே காயார் கிராமத்தில் வேலூர் இன்டர்நேஷனல் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியின் திறப்பு விழாவிற்கு வி.ஐ.டி. கல்விக்குழும தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். 

துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது: பள்ளிக் கல்வியில் தாய்மொழியை பயன்படுத்துவதற்கும் நாம் உரிய கவனம் செலுத்த வேண்டும். எங்கெங்கு முடியுமோ, குறைந்தபட்சம் தொடக்க நிலை வரையிலாவது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும். ஒருவர் தம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை மொழிகளை கற்றாலும், தாய்மொழியில் வலுவான அடித்தளமிடுவது அவசியம்.

பல மொழிகளை பயில்வது குழந்தைகளிடையே மேம்பட்ட அறிவாற்றல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் தமது தாய்மொழியுடன், பிற மொழிகளிலும் புலமை பெற்றிருப்பது, கலாச்சார பிணைப்புகளை உருவாக்க உதவுவதோடு, புதிய உலக அனுபவங்களை அறிந்து கொள்ளவும் உதவும். இவ்வாறு வெங்கய்யா நாயுடு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து