முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் கேப்டனாக ஜஸ்ப்ரிட் பும்ரா நியமனம்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      விளையாட்டு
cricket 2022 06 30

Source: provided

பர்மிங்காம்: இந்தியா -இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்குகிறார்.

பயிற்சி ஆட்டம்...

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். 

பும்ரா தலைமையில்...

இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையாததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனவும் ,அவர் இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு வேகப்பந்துவீச்சாளரான பும்ராவுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது, 

கபில்தேவுக்கு பிறகு... 

இன்று நடைபெறும் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. 28 வயதான பும்ரா இதற்கு முன்பு எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை. மேலும் 1987-ம் ஆண்டு கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் அவர் பெற உள்ளார்.

உழைக்கக் கூடியவர்... 

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் இன்று நடைபெறவுள்ள நிலையில் விராட் கோலி பற்றி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது., அருமையான உடற்தகுதி கொண்ட, கடினமாக உழைக்கக் கூடியவர் விராட் கோலி. பயிற்சி ஆட்டத்தில் அச்சூழலில் அவர் எடுத்த 50, 60 ரன்களும் முக்கியமானவை. சதம் அடிக்க முடியாத இந்த நிலை எல்லா வீரர்களும் எதிர்கொண்டதுதான். ஊக்கமில்லாமல் கோலி விளையாடுகிறார் என்கிற பேச்சுக்கு இடமில்லை. சதங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. கேப்டவுனில் 70 ரன்கள் எடுத்தது அருமையான இன்னிங்ஸ், அது சதமாக மாறாவிடிலும். 

பங்களிப்பே முக்கியம்... 

விராட் கோலி போன்ற ஒரு வீரர், அவர் நிர்ணயித்த தரம், எடுத்த சதங்களின் எண்ணிக்கை போன்றவற்றால் சதமெடுப்பதைத்தான் வெற்றிக்கான அளவுகோலாக மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் ஒரு பயிற்சியாளராக, ஆட்டத்தின் வெற்றிக்குப் பங்களிக்கும் 50, 60 ரன்கள் கூட முக்கியமானவை. எங்களுடைய கோணத்தில், அவர் சதமடிப்பதில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை. பங்களிப்பே முக்கியம். ஆடுகளத்திலும் வெளியேயும் அவர் தொடர்ந்து பங்களித்து, அணிக்குப் பெரிய ஊக்கமாக உள்ளார் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!