முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனக்கு நோய் உள்ளதாக கூறிய பிரபல நடிகை !

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      தமிழகம்
thumb

Source: provided

இன்றைக்கு நடிகைகள் தங்களது உடல் குறித்து வாய் திறந்து பேசுவது மிகவும் அரிது. அதே நேரத்தில் பாலிவுட் உள்ளிட்ட சில துறைகளில் நடிகைகள் ஜிம்மில் வொர்க் அவுட் பண்ணும் படங்களை கூட வெளியிட்டு தங்களது ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

விக்ரம் படத்தின் மூலம் புதிய சாதனை படைத்தவர் கமல். அவரது மகள் ஸ்ருதிஹாசன் 7 ஆம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழின் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  இநநிலையில் அண்மையில் தனது அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டில் அவை வைரலாகின.

இந்த சூழலில் தனக்கு கர்ப்பப் பையில் நீர்கட்டி இருப்பதாகவும் அதனால் ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் தனக்கு ஹார்மோன் தொடர்பான பிரச்னைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருந்த போதிலும் எனது செயல்பாடுகள் நார்மலாக தொடர்வதாகவும், தொடர்ந்து நான் வொர்க் அவுட் செய்து வருவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.அவரின் இந்த துணிச்சலான பதிவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!