முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவிட்சர்லாந்தில் நடந்த தன பாலின ஈர்ப்பு இணையர்களின் திருமணம்

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      உலகம்
Switzerland 2022 07 02

Source: provided

ஜெனிவா : சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக தன பாலின ஈர்ப்பு இணையர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் 9 மாதங்களுக்கு முன்னர் அனைவருக்கும் திருமணம் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பொதுமக்களில் 64 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் தன பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் தற்போது அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, முதல் முறையாக நேற்று முன்தினம் தன பாலின ஈர்ப்பு இணையர்கள் பலரும் திருமணம் செய்து கொண்டனர்.  அலின், லாரே ஆகியோர் சுவிட்சர்லாந்தில் இந்த முறைப்படி முதலில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினராக அறியப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் 21 ஆண்டு வருடங்களாக காதலில் இருந்திருக்கிறார்கள்.

இவர்களது திருமணத்தில் நூற்றுக்கணக்கான நண்பர்களும், உறவினர்களும் கலந்து கொண்டனர். இந்தத் திருமணம் குறித்து ஜெனிவா மேயர் மரியா பார்பே கூறும் போது, இது மிகப் பெரிய தருணம். இந்த திருமணங்கள் மூலம் வலுவான செய்தி, சமூகத்திற்கு அனுப்பப்படுகிறது என்றார். தன பாலின ஈர்ப்புத் திருமணத்தை ஏற்றுக் கொண்ட கடைசி ஐரோப்பிய நாடாக சுவிட்சர்லாந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து