முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உஸ்பெகிஸ்தானில் ஆக. 2 வரை அவசர நிலை பிறப்பிப்பு : அதிபர் மாளிகை தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      உலகம்
Uzbekistan 2022 07 03

Source: provided

தாஷ்கண்ட் : கரகல்பக்ஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலைமை ஆகஸ்ட் 2 வரை நீடிக்கும் என்று அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. 

உஸ்பெகிஸ்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட மத்திய ஆசிய நாடாகும். சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து தனி நாடாக உள்ளது. தற்போதைய உஸ்பெக் அரசியலமைப்பின் கீழ், கசகஸ்தான் நாட்டை ஒட்டியுள்ள கரகல்பக்ஸ்தான் பிராந்தியம், உஸ்பெகிஸ்தானுக்குள் இருக்கும் தனி இறையாண்மை கொண்ட ஒரு குடியரசு என குறிப்பிடப்படுகிறது மற்றும் தனி நாடாகவும் பிரிந்து செல்ல உரிமை உள்ளது. இந்த நிலையில், உஸ்பெகிஸ்தான் அதிபர் அரசியலமைப்பின் புதிய திருத்தங்களை மேற்கொண்டார். 

அதன்படி, கரகல்பக்ஸ்தானுக்கென தனி இறையாண்மை மற்றும் பிரிவினைக்கான உரிமை ஆகியவை அனுமதிக்கப்படாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கரகல்பக்ஸ்தானில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தை கட்டுப்படுத்த நடந்த போலீஸ் தடியடியின் போது உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, உஸ்பெகிஸ்தான் அதிபர் கரகல்பாக்ஸ்தானுக்கு சென்றிருந்த போது கரகல்பக்ஸ்தான் அந்தஸ்தை பலவீனப்படுத்தும் அரசியலமைப்பு திருத்தங்கள் ரத்து செய்யப்படும் என்று கூறினார். 

இந்த நிலையில், உஸ்பெகிஸ்தானில் ஒரு மாத காலத்துக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கரகல்பக்ஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலைமை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுக்குப் பிறகு ஆகஸ்ட் 2 வரை நீடிக்கும். பொதுமக்கள் போராட்டத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்கவும் மற்றும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து