எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காசா : காசா மீதான ராணுவ விரிவாக்கம் தொடர்பாக பாலஸ்தீனர்கள் வெளியேற இஸ்ரேல் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில், காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. காசா நகரத்தின் மீது, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று தரை வழி தாக்குதலை தொடங்கி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் கட்டமைப்புகளை அழிப்பதற்காக, காசா மீதான ராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுவதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, இஸ்ரேலின் செய்தித்தொடர்பாளர் அவிசாய் அட்ரீ கூறுகையில், நேற்று காலை முதல் காசா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதாகக் கூறியுள்ளார். முன்னதாக, காசா மீதான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் எனவும் அங்குள்ள மக்கள் வெளியேற வேண்டுமெனவும், கடந்த ஒரு மாதமாகவே இஸ்ரேல் அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. ஆனால், காசாவின் தெற்கு பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை அதிகரித்துள்ளதால், வடக்கு காசா மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


