முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் பார்வையற்றோருக்கான மகளிர் டி-20 உலகக்கோப்பை நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2025      விளையாட்டு
Woman 2023-12-16

Source: provided

மும்பை : பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரம் தேர்வு...

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் புது தில்லி, பெங்களூரு மற்றும் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. இந்நிலையில், நேபாளத்தில் நிலவும் வன்முறை சூழல் காரணமாக, பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகளை நடுநிலையான இடத்தில் நடத்தவும், போட்டிகளை இணைந்து நடத்தவும் இலங்கையின் கொழும்பு நகரத்தை உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது.

டெல்லி, பெங்களூருவில்...

இதனைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 11 முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை, புது தில்லி, பெங்களூரு மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்த உலகக் கோப்பைத் தொடரில், 21 லீக் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள் மற்றும் ஒரு இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், இந்திய பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமர்த்தனம் அறக்கட்டளை இணைந்து ஒருங்கிணைக்கும் இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து