முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2025      விளையாட்டு
INDIA 2025-08-22

Source: provided

அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.

8 அணிகள்... 

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறும்.

7-வது லீக் ஆட்டம்.... 

இதில் அபுதாபியில் மாலை நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.), அறிமுக அணியான ஓமனை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அலிஷான் ஷராபு (51 ரன், 38 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் முகமது வாசீம் (69 ரன், 54 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) அரைசதம் அடித்தனர். பின்னர் ஆடிய ஓமன் 18.4 ஓவர்களில் 130 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஐக்கிய அமீரகம் 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமீரகம் தரப்பில் ஜூனைத் சித்திக் 4 விக்கெட்டும், ஹைதர் அலி, முகமது ஜவாதுல்லா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஐக்கிய அரபு அமீரகம்... 

2-வது ஆட்டத்தில் ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ஓமனுக்கு 2-வது தோல்வியாகும். இதன் மூலம் ஏ பிரிவில் 4 புள்ளிகளை பெற்றுள்ள இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பையில் முதல் அணியாக சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2 போட்டிகளில் விளையாடி 2-லும் வெற்றி பெற்று நல்ல ரன்ரேட்டை (+4.793) கொண்டுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் முதல் 2 இடங்களில் இருக்கும். இதன் காரணமாக இந்திய அணி சூப்பர் 4 சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது.

பாகிஸ்தான் அணியுடன்... 

மறுபுறம் பாகிஸ்தான் மற்றும் யு.ஏ.இ. அணிகள் முறையே 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி கண்டுள்ளன. இந்த சூழலில் துபாயில் நாளை நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணி, பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதில் வெற்றி காணும் அணி ‘ஏ’ பிரிவில் இருந்து 2-வது அணியாக அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும். ஓமன் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து