எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார். இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார். சீன வீராங்கனை டான் ஸோங்கி உடனான 11 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப்போட்டியில், 8 புள்ளிகளைப் பெற்று தொடரை வென்றுள்ளார். இதன்மூலம் இரண்டாவது முறையாக கிராண்ட் செஸ் தொடரை வைஷாலி வென்று அசத்தியுள்ளார்.
இந்த நிலையில், கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற பிடே கிராண்ட் செஸ் தொடரில் தனது நிதானத்தாலும் அபார ஆட்டத்தாலும் வென்று, வெற்றி மகுடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள 'நம்ம சென்னைப் பொண்ணு' வைஷாலிக்கு எனது பாராட்டுகள். இதன் மூலம் அவர் பெருமதிப்பு கொண்ட கேண்டிடேட்ஸ் (பெண்கள் பிரிவு) தொடருக்கும் தகுதிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது வைஷாலியின் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, சென்னையின் வெற்றி, தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி! இதைப் பார்த்து, உலக அரங்கில் நம்மாலும் நமது கனவுகளை நனவாக அரங்கேற்ற முடியும் என ஊக்கம் பெறும் எண்ணற்ற இளம்பெண்களின் வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.
_________________________________________________________________________________________________
பாக்.கின் கோரிக்கை நிராகரிப்பு..?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி. பொது மேலாளர் வாசிம் கானுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆசிய கிரிக்கெட்டுக்கான போட்டி நடுவர் பணியில் இருந்து ஆன்டி பைகிராப்ட்டை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. மேலும் அவரை நீக்காவிட்டால் எஞ்சிய ஆசிய போட்டியில் இருந்து விலகிவிடுவோம் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் போட்டி நடுவர் பைகிராப்ட்டை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் வாரியத்தின் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் வாரியத்தின் கோரிக்கையை ஏற்க போதுமான காரணங்கள் இல்லை என ஐ.சி.சி. கருதுகிறது. மேலும் கைகுலுக்கும் சம்பவத்தில் பைகிராப்ட் குறைந்தபட்ச பங்கை மட்டுமே கொண்டிருந்தார் என்பதும், டாஸில் ஒரு கேப்டன் மற்றொரு கேப்டனுடன் கைகுலுக்க மறுத்தால் ஏற்படும் பொது சங்கடத்தைத் தவிர்க்கவே அவர் இதனை செய்திருக்கலாம் என்றும் ஐ.சி.சி. கருதுகிறது. எனவே இந்த விவகாரத்தில் ஐ.சி.சி., போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட்டுக்கு சாதகமான முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
_________________________________________________________________________________________________
பிரதமர் மோடிக்கு மெஸ்ஸி பரிசு
பிரதமர் மோடி இன்று (17ம் தேதி) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பிறந்தநாள் பரிசு அனுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக, அவருக்கு 2022 ஆம் ஆண்டு உலககோப்பையை வென்ற அர்ஜென்டினா ஜெர்சியில் தனது கையொப்பமிட்டு பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார். மெஸ்சி வருகிற டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார். மெஸ்ஸி டிசம்பர் 12-ந் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
_________________________________________________________________________________________________
அக்சர் படேலுக்கு இம்பேக்ட் வீரர் விருது
ஆசிய கோப்பை தொடரில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்றது. முன்னதாக ஆசிய கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு அணி நிர்வாகம் சார்பில் ‘இம்பேக்ட் வீரர்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அதன்படி இந்த போட்டியின் இம்பேக்ட் வீரராக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பந்துவீச்சில் 2 விக்கெட் மற்றும் பீல்டிங்கில் ஒரு கேட்ச் பிடித்து ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


