முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகிற்கே இந்தியா தலைமை தாங்கும்: அடுத்த 40 ஆண்டுகள் இந்தியாவில் பா.ஜ.க.வின் சகாப்தமாக இருக்கும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      இந்தியா
AMIT-SHAH 2022 01 11

Source: provided

ஐதராபாத் : அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் இந்தியாவில் பா.ஜ.கவின் சகாப்தமாக இருக்கும் என்றும், உலகிற்கே இந்தியா தலைமை தாங்கும் என்றும் தேசிய நலன் கருதி எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் காங்கிரசார் எதிர்க்கிறார்கள் என்றும் ஐதராபாத்தில் நடைபெற்ற பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். 

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் ஆற்றிய உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வரும் பா.ஜ.க தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்த அமித்ஷா வாரிசு அரசியல், சாதி வெறி மற்றும் திருப்திப்படுத்தும் அரசியல் ஆகிய பெரும் பாவங்களே, பல ஆண்டுகளாக நாடு அனுபவித்த துன்பங்களுக்கு காரணம் என்று கூறினார். குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளும் உச்சநீதிமன்றத்தால் தவறானவை என்று அறிவிக்கப்பட்டதாகவும், இது குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என அமித்ஷா தெரிவித்தார். 

எதிர்க்கட்சிகள் இன்று பிளவுபட்டுள்ளது என்றும், கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் போராடுகிறார்கள், ஆனால் கட்சித் தலைவரை அவரகள் தேர்ந்தெடுக்கவில்லை என்று அமித்ஷா தெரிவித்ததாக கூறினார். காங்கிரசுக்கு மோடி குறித்த பயம் (ஃபோபியா) உள்ளதாகவும், தேசிய நலன் கருதி எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் இந்தியாவில் பா.ஜ.கவின் சகாப்தமாக இருக்கும் என்றும், இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

தெலுங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்துறை அமைச்சர் அழைப்பு விடுத்ததாகவும், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டதாகவும் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து