முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

44-வது செஸ் ஒலிம்பியாட்: 3-வது அணியை அறிவித்தது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      விளையாட்டு
India 2022 07 03

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்தியா தனது 3வது அணியை அறிவித்துள்ளது. 

முதல் முறையாக...

உலக செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), ஏஐசிஎஃப், தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் கௌரவமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துகின்றன. வரும் ஜூலை 28 முதல் ஆக. 10 வரை நடக்கவுள்ள இப்போட்டிக்கு ரூ.120 கோடியை ஒதுக்கி உள்ளது தமிழக அரசு. 

2,500 பேர் பங்கேற்பு...

மொத்தம் 180 நாடுகளைச் சோ்ந்த 2500-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும் பெண்கள் பிரிவில் 162 அணிகளும் விளையாட இருக்கின்றன.இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் 3வது அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள 3-வது அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!