முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகும் கடுவா

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      சினிமா
Prithviraj 2022 07 04

Source: provided

பிரித்விராஜ் புரடக்சன்ஸ் சுப்ரியா மேனன் மற்றும் இணை தயாரிப்பாளராக மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் கடுவா. பிரித்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜினு ஆபிரகாம் கதை திரைக்கதை மற்றும் வசனம் எழுத படத்தை இயக்கி இருப்பவர் ஷாஜி கைலாஷ். இம்மாதம் 7 ஆம் தேதி இந்த படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு சென்னையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய பிரித்விராஜ், "மலையாள திரையுலகில்  தொடர்ந்து புதுப்புது கதையம்சத்துடன் படங்கள் வெளியாகி வருகின்றன. அதே சமயம் மாஸ் ஆக்சன் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. மலையாளத்தில் இப்படி ஒரு மாஸ் ஆக்சன் படம் உருவாகாதா என ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கே கூட அந்த எண்ணம் தோன்றியது. அதன் விளைவாகத்தான் இந்த கடுவா திரைப்படம் உருவாகியுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!